Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பவித்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பவித்ரா தனது தாய்க்கு உதவியாக துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். அதன்பின் பவித்ரா கண்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பாக தனது தாய் வீட்டிற்கு வந்த பவித்ரா இங்கே இருந்துள்ளார். பின்னர் அவரது பெற்றோர் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமாகி 5 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |