Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணம்…. உறவினர்கள் அளித்த புகார்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை….!!

தவறான சிகிச்சை அளித்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு வனிதா என்று மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வனிதா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றுள்ளார். இதனையடுத்து வனிதா இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி வனிதா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென வனிதா மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து உறவினர்கள் நர்ஸ் மணிமாலா ஊசி போட்ட சில மணி நேரத்திற்கு பிறகுதான் வனிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வனிதாவின் இறப்புக்கு நர்ஸ் மணிமாலா தவறான ஊசி போட்டது தான் காரணம் என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் உடலை வாங்க மறுத்த அவரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பச்சிளம் குழந்தையுடன் கண்ணீர் மல்க வனிதாவின் இறப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஸ்ரீவத்சவ் மற்றும் நர்ஸ் மணிமாலாவை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |