Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இரண்டு நாள் கழிச்சி தரேன்” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோடிஸ்வரன் நகரில் தாளமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நிறைமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் நிறைமதி மகனுக்கு டியூசன் பீஸ் கட்டுவதற்காக கணவனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் தாளமுத்து இரண்டு நாள் கழித்து தருவதாகக் கூறி விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து மகனுக்கு டியூசன் பீஸ் கட்ட முடியாததை எண்ணி மனமுடைந்த நிறைமதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நிறைமதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |