Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி திடீரென எலி மருந்து சாப்பிட்டு விட்டு கீழே மயங்கி கிடந்துள்ளார்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |