இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இந்துவிற்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்துமதி பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இந்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் இந்துவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த களக்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.