இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடந்தவாடி வாநத்தம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகசுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனவேதனை அடைந்த சண்முகசுந்தரி கடந்த 22-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் சண்முகசுந்தரியை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.