Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலையாண்டபள்ளி கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2  மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் லட்சுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதற்கிடையே கள்ளக்காதலனுக்கும் லட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இதில் மனமுடைந்த லட்சுமி விஷம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் லட்சுமியை உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக லட்சுமியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |