Categories
உலக செய்திகள்

பெண்களை கொலை செய்த வாலிபர்…. போலீசாரிடம் சிக்கிய சம்பவம்…. 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு….!!

அமெரிக்காவில் இளம்பெண்களை கொன்ற வாலிபருக்கு 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் தா சாரா பட்லர் என்னும் இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது தாயின் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நெடுநேரம் ஆகியும் சாரா வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து அவர் சமூக வலைத்தளத்தில் வீலர் வீவர் என்ற 20 வயதான வாலிபருடன் நட்பு பாராட்டியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவரை சந்திப்பதற்காகத் தான் அன்று சாரா வெளியே சென்றுள்ளார். மேலும் சாரா காணாமல்போன தினத்தன்று அவரின் தோழி மற்றும் சகோதரி அவருடைய சமூக வலைத்தளத்தை ஆராய்ந்துள்ளனர்.

மேலும் இறுதியாக சாரா பேசிய நபரை கண்டுபிடித்துள்ளனர். அதிலும் புது பெயரில் கணக்கு ஒன்று தொடங்கி அதிலிருந்து அந்த நபருக்கு பேசியுள்ளனர். இதனையடுத்து இருவரும் அவரை சந்திக்க முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரையும் காண்பதற்காக வீலர் காரிலிருந்து இறங்கியுள்ளார். இந்த நிலையில் போலீசார் அவரை மடக்கி பிடித்துள்ளனர். இருப்பினும் சாராவின் உடல் கிடைக்காததால் வீலரைப் போலீசார் விட்டுவிட்டனர். இதன் பிறகு பத்து நாட்கள் கழித்து தான்  சாராவின் உடலானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீலர் மீது இருந்த சந்தேகம் உறுதிசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்தன. அதில், வீலர் தோற்றத்தில் அழகாக இருந்துள்ளார். இதனை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் சாராவுடன் நட்பு பாராட்டி அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் சாரவும் சந்திக்க சென்றுள்ளார். அங்கு வீலர் சாராவை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். இது போன்று பெண்களை குறிவைத்து கொலை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவர்களை தூங்க வைப்பதற்காக ஆன்லைனில் மயக்க மருந்து வாங்கியும்  வீட்டில் தயாரிக்கப்பட்ட நஞ்சையும் பயன்படுத்தியுள்ளார்.

இறுதியாக வெஸ்டி என்ற ஒரு பெண்ணை துன்புறுத்தி அவரை தீ வைத்து எரித்து எவரும் இல்லாத வீட்டில் உடலை வீசி சென்றுள்ளார். குறிப்பாக வெஸ்டியின் உடல் முழுவதும் கருகி இருந்ததால் அவரின் பற்களை வைத்துதான் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். அதிலும் வெஸ்டிக்கு முன்பாக டெய்லர் என்ற பெண்ணைக் கொல்ல தான் என்று முடிவு செய்திருந்தாராம். ஆனால் டெய்லர் எப்படியோ தப்பி ஓடியதால் வெஸ்டியை கொலை செய்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சாராவின் தோழி மற்றும் சகோதரி இருவரும் தான் சமூக வலைத்தளங்களை பார்த்து இறுதியாக பேசிய நபரை கண்டுபிடித்து போலீசில் சிக்க வைத்துள்ளனர். தற்போது லீவருக்கு 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |