இளம் பெண்ணே காதலன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வீராட்சி குப்பம் கிராமத்தில் 26 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் மூர்த்தி என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி கேரளாவிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது இளம்பெண் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் ஊருக்கு வந்த மூர்த்தி காதலியை பார்க்க சென்ற போது அவருக்கு திருமணம் ஆன தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக மூர்த்தி காதலியிடம் கேட்ட நிலையில் தான் செலவு செய்த 6 லட்ச ரூபாயை திரும்ப தர வேண்டும் என கூறியுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த மூர்த்தி இளம்பெண்ணை தாக்கி கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த இளம் பெண் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்துள்ளனர்.