Categories
உலக செய்திகள்

இளம் பெண் கொலை வழக்கு…. நிரூபிக்கப்பட்ட குற்றம்…. மேல்முறையீடு செய்த இளைஞர்….!!

இளம் பெண்ணை கொன்ற வழக்கில் இளைஞருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் 21 வயதான இளைஞர் ஒருவர் தமது நெருங்கிய தோழியை அன்பு வார்த்தைகள் கூறி Freiburg மாநிலத்திற்கு வரவழைத்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை Neuchâtel ஏரிக்கு கூட்டிச்சென்று தீடிரென சுத்தியலால் அவரின்  தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அந்தப் பெண் சுயநினைவை இழந்து கீழே விழுந்துள்ளார். இதன் பிறகு அந்த இளைஞர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுமட்டுமின்றி அவரின் கைகளை கட்டி ஏரியில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் அந்தப் பெண்ணின் சடலம் ஏரியில் இருந்து மீட்கப்பட்டது. குறிப்பாக அந்தப் பெண்ணின் சடலாமானது கைகள் கட்டப்பட்டு ஆடைகள் நீக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் கிடைத்திருந்ததால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா அல்லது கடும் குளிர் காரணமாக உயிரிழந்தாரா என்பதை மருத்துவர்களால் கூறமுடியவில்லை. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண்ணின் நெருங்கிய நண்பர் தான் இதனை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அந்த  இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். மேலும் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞரின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு 70000 பிராங்குகள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும் அந்த இளைஞர் தன் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.  குறிப்பாக அவர் மேல்முறையீடு செய்யப்போவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |