Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை” வாலிபர் செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு அருண் குமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி படித்து வருகின்றார். இந்நிலையில் அருண்குமாருக்கும் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணின் வீட்டிற்கு பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி அருண்குமார் அங்கு சென்று வந்துள்ளார். இவ்வாறாக ஒருநாள் அருண்குமார் இளம்பெண்ணின்  வீட்டிற்கு பார்க்க சென்றபோது அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருண்குமாரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அருண்குமார் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததோடு அந்த பெண்ணை ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பியுள்ளார். அதன் பின் இளம் பெண்ணின் பெற்றோர் அருண்குமாரை பிடித்து திட்டியுள்ளனர். இதனையடுத்து அருண்குமார் எனது சகோதரிக்கு திருமணம் முடிந்தவுடன் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்கிறேன் என இந்த பெண்ணின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் தங்கைக்கு திருமணம் முடிந்தவுடன் அருண்குமார் எந்த பதிலும் பெண்ணின் வீட்டிற்கு கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் அருண்குமார் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது அருண்குமார் அந்தப் பெண்ணை கடுமையாக திட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த இளம்பெண் சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன் அருண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அதிகரிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த அபராத பணத்திலிருந்து இளம்பெண்ணுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |