குளித்துக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் 9 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெலுங்குபாளையம் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திவ்யா கடந்த 8-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அவர் திருச்செந்தூர் கோவில் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் திவ்யா குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக மர்மநபர் ஒருவர் அவர் கழுத்தில் கிடந்த 7 1\2 பவுன் தாலி சங்கிலியையும், அதோடு கிடந்த 1 1\2 பவுன் மற்றொரு சங்கிலியையும் ஆக மொத்தம் 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் வழக்கு பதிவு செய்த திருச்செந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.