காட்டில் தலையில்லாமல் நிர்வாண நிலையில் பெண் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் கணவர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காட்டில் தலையில்லாமல் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த இளம்பெண்ணின் கொலை வழக்கில் அவரது கணவர் உள்பட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் ராஞ்சியில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணின் உடல் தலையில்லாமல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது . விசாரணையில் கொல்லப்பட்ட அந்த பெண்ணின் பெயர் சுபியா பிரவீன் என்று தெரியவந்தது. இதுகுறித்து அவரது கணவரிடம் காவல்துறையினர் விசாரிக்க முடிவு செய்த நிலையில் அவர் தலைமறைவானார்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த விசாரணையில், கைது செய்யப்பட்ட நபரின் பெயர் பிலால். பிலாலின் முதல் மனைவியின் பெயர் ஷபோ. பிலாலின் இரண்டாவது மனைவி தான் சுபியா பிரவீன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பிலாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த அவர் சுபியா மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதற்கிடையே சுபியாவுக்கும் ஷபோவுக்கும் ஒத்துப் போகாததால் இருவரும் அடிக்கடி சண்டை விட்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஷபோவும் பிலாலும் சேர்ந்து சுபியாவை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி சுபியாவை இருவரும் சேர்ந்து அடித்துக் கொன்று தலையை தனியாக வெட்டி எடுத்து விட்டு உடலை மட்டும் காட்டில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.