Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை…. 5 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் பொன்மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருநெல்வேலி டவுன் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மாரியப்பன் வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். அப்போது மாரியப்பனும், அவரது உறவினர்களும் பொன்மாரியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

இதனால் பொன்மாரி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பொன்மாரி இதுகுறித்து நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பொன்மாரியின் கணவர் மாரியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பன்னீர்செல்வம், மணி, புவனேஸ்வரி, சித்ரா ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |