Categories
உலக செய்திகள்

இலங்கை தாதாவின் கூட்டாளி… என்கவுண்டரில் சுட்டுக்கொலை… போலீஸின் அதிரடி செயல் ..!!!

இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க இலங்கை காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின்  கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க  இலங்கை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில்  சுட்டுக்கொல்லப்பட்டார்.  இலங்கையின் முல்லேரியாவில்  அசித்த ஹேமதிலக்கவை காவல்துறையினர் சுற்றிவளைத்த நிலையில்,  அவர்கள் மீது கையெறி குண்டுகளை ஹேமதிலக்க வீசியுள்ளார்.
அப்போது  காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  ஹேம திலக்க சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘சோல்ட்டா’ என்று அறியப்படும் அசித்த ஹேமதிலக அண்மையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |