Categories
உலக செய்திகள்

‘ஹாட் சாஸ் விற்பனை அமோகம்’…. கனடாவை கலக்கும் இலங்கை தம்பதியர்…. சூப்பர் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு….!!

இலங்கை தம்பதியினர் தயாரிக்கும் ஹாட் சாஸிற்கு சூப்பர் மார்க்கெட்டுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கனடாவிலுள்ள வின்னிபெக்கில் இலங்கை தம்பதியரான ராஜகருணாவும் அர்ஷலா டோனாவும் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு தங்களது நண்பர்களுக்காக இலங்கை உணவு பாணியில் சாஸ் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து தற்பொழுது கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா முதல் ஒன்ராறியோ வரை உள்ள பல பகுதிகளில் இருக்கும் Red River Co-op, Sobeys, Safeway, Lucky, Walmart போன்ற சூப்பர் மார்கெட்டுகளில் அவர்களின் ஹாட் சாஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்போது இந்த தம்பதியினர் வின்னிபெக்கில் உள்ள சமுதாய நலக்கூடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து பெரிய அளவில் சாஸ் தயாரிக்கின்றனர். ஏற்கனவே அவர்களுக்கு சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை நீண்டகாலமாக இருந்துள்ளது. மேலும் ராஜ்கருணாவின் மனைவி டேனா ஒரு உணவு அறிவியாலாளர் என்பதால் சாஸின் தரக்கட்டுப்பாட்டு பொறுப்பை அவர் எடுத்துக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த ஹாட் சாஸிற்கு அவர்கள் பிள்ளைகள் தான் பெயர் வைத்துள்ளனர்.

அதிலும் அவர்களின் மகள் பசி வந்தால் ‘டேஸ்ட் டேஸ்டி’ என்பாளாம். மேலும் அவர்களின் மகன் heat என்ற பெயரை கூறியுள்ளார். இதனால் அதற்கு ‘Tasty Heat’s Hot Sauce’ என்று பெயர் வைத்துள்ளனர். குறிப்பாக இவர்கள் இந்த ஹாட் சாஸிற்காக மனித்தோபாவிலேயே மிளகாய் செடியை பயிரிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த சாஸ் தயாரிப்பானது உள்ளூர் மக்களையும் இணைத்து செய்வதால் இதனை என்னுடைய தொழிலாக மட்டும் காணவில்லை. அனைவரின் பங்களிப்பும் உள்ள தொழிலாக தான் பார்க்கிறேன் என்று ராஜகருணா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |