இலங்கையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கிலோவிற்கு 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பால் மாவின் விலை ஒரு கிலோ 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் பால் மாவின் சந்தை விலை ஒரு கிலோவிற்கு 1,145 ரூபாய் வரை அதிகரிக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சர்வதேச சந்தைகளில் பால்மாவின் விலை அதிகரிப்பால் இலங்கையிலும் அதன் இறக்குமதி பெருமளவில் குறைந்துள்ளது.
இதனை தொடர்ந்து பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினரான லக்ஷ்மன் வீரசூரியா வருகின்ற திங்கட்கிழமை புதிய விலைகள் உள்ளடங்கிய அமைச்சரவை அனுமதி வழங்காத ஆவணங்கள் முன்வைக்கப்படும் என கூறியுள்ளார். இதற்கேற்ப வருகிற வாரம் பால்மாவிற்கான பற்றாக்குறைக்கு தீர்வுகள் கிடைக்கப்படும் என்று மக்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கொழும்பு துறைமுகங்களில் கன்டெய்னர்களில் உள்ள பால் மாவுகளை வருகிற செவ்வாய் கிழமை விடுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என பால்மா இறக்குமதியாளர் சங்கம் கூறியுள்ளது. இதற்கு டாலருக்கு இணையான இலங்கை வர்த்தகம் வீழ்ச்சியடைந்ததே காரணமாக உள்ளது. தற்போது பால்மாவிற்கான தட்டுப்பாடுகளை சீர் செய்வதற்கான முயற்சிகளை பால்மா இறக்குமதியாளர் சங்கம் மேற்கொண்டு வருகின்றது.