பொருளாதார நெருக்கடியால் பழங்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தபட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கொரோனாவுக்கு பின்னர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையில் சீனாவிடம் இருந்து பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடன் வாங்கி அதனை கட்ட முடியாமல் தவித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள், தங்கம், பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளும் இலங்கையில் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பாலாடைக்கட்டி, தயிர், பழங்கள் ஆகியவற்றிற்கான வரிகள் அதிகரிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் அமலில் வரும் என்று அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஒரு கிலோ ஆப்பிள் 200 ரூபாய், திராட்சை 100 ரூபாய், ஆரஞ்சு 75 ரூபாய், மாதுளம் 100 ரூபாய் என்று இறக்குமதி வரி அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.