இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல்வேறு இடங்களில் மக்கள் போராடி வருகின்றனர்.
இலங்கையில் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் பற்றாக்குறையால் நாடே ஸ்தம்பித்துள்ள நிலையல் ஆங்காங்கே மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரசுக்கு சொந்தமான அனைத்து பெட்ரோல் நிலையங்களிளும் அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசலை கேன்களை வாங்கி செல்கின்றனர். இதற்கிடையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதால் பாதுகாப்பிற்காக 2 ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் இன்று பெட்ரோல் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் பெட்ரோல் வாங்குவதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பதற்றத்தை அதிகரித்தது. மேலும் முன்னதாகவே 3 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் 6 பேர் இங்கு வந்துள்ளனர்.