அமெரிக்காவில் தனது மகளின் படுக்கை அறையை எட்டிப்பார்த்த இளைஞனை பெண் ஒருவர் துரத்தி சென்று பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் என்ற மாகாணத்தில் பணி முடிந்து பிலிஸ் பெனா என்ற பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தன் வீட்டிற்கு முன்னே இளைஞன் ஒருவன் தன் மகளின் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பதை பிலிஸ் பெனா கண்டுள்ளார். அந்த அறையில் தனது மகள் இல்லை என்பதை சுதாரித்துக் கொண்ட அவர் உடனே அந்த இளைஞனை விரட்டி பிடித்து விட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து வந்த பிலிஸ் பெனாவின் மகள் காவல்துறையினர் வரும் வரை தனது தாயுடன் சேர்ந்து அந்த இளைஞனை தப்பி செல்லாமல் பார்த்துக் கொண்டார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இளைஞன் 19 வயது நிரம்பிய ஜேம்ஸ் ஹாக்கின்ஸ் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் இளைஞனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மகளுக்கு ஒரு பிரச்சனை என்றதும் எதையும் பொருட்படுத்தாமல் மகளை காப்பாற்றிய தாய்க்கு இணையான உறவு வேறு எதுவும் இல்லை என்பதற்கு இச்சம்பவமே மிகப் பெரிய சாட்சி.