லண்டனில் ஓரினச்சேர்க்கையாளர் கொலை செய்யப்பட்டதற்கு மனித உரிமைகள் குழு ஒன்று ஊர்வலம் நடத்தியுள்ளது.
லண்டனில் டவர் ஹாம்லட்ஸில் Ranjith Kankanamalage என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து அவரின் உடலானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவர் தலையில் அடிப்பட்டதால் தான் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஓரினச்சேர்க்கையாளரான Ranjithன் மரணம் LGBTயின் அமைப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரை கொலை செய்தவரை அடையாளம் கண்டு கூறுபவர்களுக்கு 20,000 யூரோ வழங்கப்படும் என்று புலனாய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
இவரின் மறைவுக்கு அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் Let Voice Be Heard என்ற மனித உரிமைகள் குழு நேற்று ஊர்வலம் நடத்தியது. இந்தக் குழுவானது பிரித்தானியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த LGBT அமைப்பினருக்காக பிரச்சாரம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து Let Voice Be Heardன் நிறுவனர் Maksudul Haque கூறியதில் “பாலின குற்றங்கள் நாளுக்கு நாள் சமூகத்தில்அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதற்காக மக்கள் குரல் எழுப்ப வேண்டும். மேலும் இது ஒரு முக்கிய பிரச்சனை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை அவர்களின் தாய், தந்தை உறவினர்கள் அனைவரும் வெறுக்கின்றனர்” தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொலை செய்யப்பபட்ட Ranjith Kankanamalage இலங்கையர் என்றும் தனது கணவருடன் பிரித்தானியாவில் வசித்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதிலும் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்காகவே பிரித்தானியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.