இளைஞர் பெருமன்றத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்ப்பேட்டையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் துணைத் தலைவர் பாலன், துணைச்செயலாளர் மகராஜ் மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட தலைவர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அதில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும், பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து அரசு மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.20 ஆயிரம் மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.