சிறைசாலையில் கைதிகள் இருவரை துப்பாக்கி காட்டி மிரட்டிய இலங்கை அமைச்சரின் பதவி பறிபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் அனுராதபுரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் சிறைச்சாலை ஓன்று உள்ளது. அதனை பார்வையிட கடந்த 12 ஆம் தேதி அந்நாட்டு ஜெயில்களின் இணையமைச்சராக பணியாற்றிய லோஹன் ரத்வத்தே சென்றுள்ளார். அப்போது அவர் அங்கிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை மட்டும் அழைத்துள்ளார். அதன்பின் அவர்களை மண்டியிட வைத்து தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இலங்கையில் ஐ.நா பிரதிநிதியான ஹன்னா சிங்கர் ஹம்டியும் அவருடைய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இத்தாலிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யும்படி லோஹன் ரத்வத்தேத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த செய்தி வெளியான சில மணி நேரத்திலேயே அதிபருக்கு லோஹன் ரத்வத்தே தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சர்ச்சைக்கு காரணமான அமைச்சர் அனுராதபுரம் சிறைக்குள் சட்டத்திற்கு விரோதமாக தனது கைத்துப்பாக்கியை எடுத்து சென்றுள்ளார். அதாவது சிறைக்கு செல்பவர்கள் யாராக இருந்தாலும் தனது சொந்த பாதுகாப்புக்கான ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பதே சட்டம். இந்த சட்டம் தெரிந்திருந்தும் அமைச்சர் லோஹன் ரத்வத்தே சிறைக்குள் துப்பாக்கியை எடுத்து சென்றுள்ளார். மேலும் அவர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பார்வையிட செல்வதற்கு முந்தைய நாள் இரவு தனது நண்பர்களை அழைத்து சென்று கொழும்பு பிரதான சிறையில் கைதிகளை தூக்கிலிடப் பயன்படுத்தப்படும் தூக்கு மரத்தை காட்டியதும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கின்றது.