Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவ குணம் கொண்டது… கமகமக்கும் மனம் உடையது… இலந்தை பழ சீசன் தொடங்கியது…!!

ஒரு கிலோ ரூபாய் 100 க்கு விற்கப்படும் இலந்தைப் பழ சீசன் தொடங்கியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்கோவில் வட்டாரங்களில் வாழை, கொய்யா, சப்போட்டா, பப்பாளி, மாம்பழம், சீதா போன்ற பல்வேறு பழவகைகள் அவ்வப்போது அறுவடை நடைபெற்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் தற்போது இலந்தை பழ சீசன் தொடங்கியுள்ளது. இந்த பழத்தை சுற்றுலா பயணிகள் அதிகம் விருப்புவதால் அழகர்கோவில் பஸ் நிலையத்தில் வைத்து விற்பனை நடைபெறுகின்றது.

ஒரு கிலோ இலந்தை பழம் ரூபாய் 100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 1௦ ரூபாய்க்கு கூரு கட்டியும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழம் இனிப்பு, புளிப்பு போன்ற சுவைகளை கொண்ட  அதிகமாக மனக்க கூடியது. அதுமட்டுமில்லாமல் வருடம் ஒருமுறை மட்டுமே பலன் தரும் இந்த இலந்தை மரத்தின் பழங்கள் மருத்துவ குணம் உடையது.

Categories

Tech |