இளவரசர் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றவியல் வழக்கில் நீதிமன்றம் அவருக்கு அவகாசம் அளித்துள்ளது.
பிரித்தானியா இளவரசர் ஆண்ட்ரூ மீது 38 வயதான வர்ஜீனியா கியூஃப்ரே என்ற பெண் அமெரிக்கா நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதாவது லண்டனில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக இளவரசர் ஆண்ட்ரூ தன்னை வற்புறுத்தி வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 20 வருடங்களுக்கு முன்பாக நடந்த இச்சம்பவத்திற்கு தற்போது தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கில் இளவரசர் ஆண்ட்ரூ கடந்த ஜுலை 14 ஆம் தேதி நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி Lewis Kaplan தெரிவித்திருந்தார். ஆனால் இளவரசர் ஆண்ட்ரூ செல்லவில்லை.
அதிலும் 60 வயதான இளவரசர் ஆண்ட்ரூ மீது இந்தக் குற்றத்திற்காக எந்தவொரு பதிவும் இல்லை. மேலும் இளவரசரும் இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தார். இந்த நிலையில் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி இளவரசர் நேரில் வந்து பதிலளிக்குமாறு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கானது நவம்பர் 3 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் ஒருவேளை கியூஃப்ரே விரும்பினால் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் வழக்கில் திருப்பம் மேற்கொள்ளப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்கா நீதிமன்றம் அளித்திருக்கும் அவகாசத்தினால் இளவரசர் ஆண்ட்ரூ கடும் நெருக்கடியில் இருக்கிறார்.