Categories
உலக செய்திகள்

ராஜ குடும்ப இளவரசியின் ரகசியம்…. குதிரை பயிற்சியாளருடன் தொடர்பு …. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தோழி….!!

இளவரசி டயானா குறித்த ரகசியங்களை அவரது தோழியான சாரா ஃபெர்குசன் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியா இளவரசியான டயானா மற்றும் இளவரசரான சார்லஸின் மணவாழ்வானது அவர்களுக்கு இனிமையை தரவில்லை. அதற்கு மாறாக அதிக பிரச்சினைகளை கொடுத்ததால் சார்லஸ் தன் முன்னாள் காதலியான கமீலாவுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இது போன்று டயானாவும் குதிரைப் பயிற்சியாளரான James Hewitt என்பவருடன் உறவை ஏற்படுத்திக் கொண்டார். இவர்கள் இரண்டு பேரின் தகாத உறவினால் இளவரசர் ஹரி மிகவும் பாதிக்கப்பட்டார். மேலும் இளவரசர் ஹரியின் தந்தை James Hewitt  என்று பல்வேறு செய்திகள் வெளிவந்தன. அதிலும் ஹரியே இரு குழந்தைக்கு தந்தையான பிறகும் இது போன்ற செய்திகள்  வந்து கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக 1995 ஆம் ஆண்டு தனக்கும் James Hewittக்கும் இடையில் உள்ள தவறான உறவை டயானாவே ஒப்புக்கொண்டார். ஏனெனில் சார்லஸ் கமீலாவுடன் தவறான உறவில் இருந்ததால் அவரை அவமதிப்பதற்காக இது போன்று செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது அவரது அன்பு மகன் ஹரியின் வாழ்வில் பெரும் இன்னல்களை ஏற்படுத்தும் என்பதை அவர் மறந்துவிட்டார். மேலும் சார்லஸ் கமீலாவுடன் உறவில் இருந்தது உண்மைதான். ஆனால் டயானாவும் இதற்கு சளைத்தவர் அல்ல. ஏனென்றால் சார்லஸ் மரணப்படுக்கையில் இறக்கும் தருவாயில் இருந்தபோது கூட டயானா வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்தார் என்பதை இந்த உலகமே அறியும். ஆனால் டயானா தனது அப்பாவி முகத்தையும் வசீகர புன்னகையும் காட்டி வெளி உலகை ஏமாற்றி வந்துள்ளார்.

அவருக்கு இன்னொரு முகம் உள்ளது என்பதை அனைவரும் பார்க்க தவறிவிட்டனர். இதற்கிடையில் டயானா வாழ்வில் நடந்த அனைத்து இரகசியங்களையும் பகிர்ந்து கொண்ட ஒரே நபர் சாரா ஃபெர்குசன். இவர் இளவரசிகளான யூஜீனி மற்றும் பீட்ரைஸின் தாய் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டயானாவின் அந்தரங்கமான ரகசியங்களை நெருங்கிய தோழியான சாராவுடன் பகிர்ந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆனால் டயானா ஒரு கார் விபத்தில் இறந்த பொழுதிலிருந்து எந்த வித ரகசியத்தையும் வெளியிடுவதில்லை என்று சாரா சத்தியம் செய்துள்ளார். ஆனால் ஹரியின் தந்தை James Hewitt தான் என்னும் வதந்தி நீண்டகாலமாக பரவி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக கூறி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “ஹரியின் தந்தை சார்லஸ் தான் James Hewitt  அல்ல என்று உறுதியாக கூறியுள்ளார். ஏனெனில் 1984 ஆம் ஆண்டு தான் டயானா ஹரியை கருவுற்றிருந்தார். ஆனால் 1986க்கும் 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் James Hewitt டயானாவுக்கு குதிரை பயற்சி அளித்தார். ஆகவே அதற்கு பிறகு தான் James Hewittம் டயானாவும் தொடர்பில் இருந்துள்ளனர். அவ்வாறு இருக்கும் பொழுது ஹரி James Hewittன் மகன் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகவே ஹரி  சார்லஸ்க்கும் டயானாவுக்கும் தான் பிறந்தவர்” என்று கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தை டயானாவுடன் தொடர்பில் இருந்த James Hewitt முற்றிலும் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |