பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் ,மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவர் ராஜா ராணி, காலா ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது நடிகை சாக்ஷி டெடி ,சிண்ட்ரெல்லா ,அரண்மனை 3 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் . இவை விரைவில் ரிலீசாக உள்ளது .
தனது சமூக வலைத்தள பக்கத்தில் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அதுமட்டுமல்லாது இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களையும் உடற்பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தி வந்தார் . இந்நிலையில் சாக்ஷி இளவரசி போன்ற உடை அணிந்து தனது அழகிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது .