இளவரசர் தனது தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல் குறித்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
பிரித்தானியா இளவரசரான பிலிப் மரணப்படுக்கையில் இருந்த பொழுது கூட நகைச்சுவையாக பேசியுள்ளார் என்று அவருடைய மகன் சார்லஸ் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ” கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று எனது தந்தையான பிலிப்பிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்பொழுது அவரின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி பேச முயற்சித்தேன். குறிப்பாக அவர் இருந்த நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பெரிதாக ஈடுபாடு கொள்ளவில்லை என்பதை நானும் அறிந்தேன். இருப்பினும் சில தயக்கங்களுடன் அவரிடம் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து பேசினேன்.
நான் “உங்கள் பிறந்தநாளைப் பற்றி பேசுவதற்காக அழைத்தேன்”அவருக்கு காது கேளாமை பிரச்சனை இருந்ததால் மீண்டும் அதையே சத்தமாக கூறினேன். நாங்கள் உங்கள் பிறந்தநாளை கொண்டாட இருக்கிறோம். அதற்காக வரவேற்ப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினேன். அதற்கு அவர் கூறியதாவது “நான் அதற்காகவாவது உயிருடன் இருக்க வேண்டுமோ” என்று நகைப்புடன் கூறினார். நானும் அதற்கு ‘நீங்கள் இதைத்தான் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்’ என்று கூறினேன். அது தான் நான் எனது தந்தையுடன் பேசிய கடைசி வார்த்தைகள் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.