Categories
உலக செய்திகள்

“நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜாவின் விளம்பரப்படம்..!”.

அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் உயர்ந்த கட்டிடத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் விளம்பர படம் திரையிடப்பட்டிருக்கிறது.

உலக அளவில் பிரபலமாக இருக்கும் அமெரிக்க நாட்டின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்திற்கு, தினசரி சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு பல மாடிக்கொண்ட  கட்டிடங்கள் இருக்கிறது. அதில், பல நூறு அடி உயரமான கட்டிடத்தில், உலக பிரபலமடைந்த சாதனையாளர்களும், பிரமாண்டமான விளம்பரங்களும் திரையிட்டு காண்பிக்கப்படும்.

இந்நிலையில், இசையமைப்பாளரான இளையராஜா, தன் பாடல்களை ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்த செயலிக்கான விளம்பர படத்தில் நடித்திருக்கிறார். அந்த விளம்பரத்தை, டைம் சதுக்கத்தின் உயரமான கட்டிடத்தில் திரையிட்டனர். அதனை இளையராஜா, தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |