தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் நாளை டிசம்பர் 15 இந்துக்களின் புனித ஸ்தலமான வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
பாரதியார் வாழ்ந்த காசி வீடு அவருக்கு சிலையும் திறந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இளையராஜாவின் இசை கச்சேரி கடந்த மாதம் துவக்க விழாவின் போது நடைபெற்றது. மீண்டும்இளையராஜா தற்போது நாளை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ளே நாளை இசை கச்சேரி நடத்தவுள்ளார்.
காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை சார்பில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த கச்சேரியில் இளையராஜா 16 பாடல்களை பாடவுள்ளார். திருவாசகத்தில் இருந்து 4 பாடல்கள் இடம்பெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் இவரின் இசை மழையில் நனைய தயாராக உள்ளனர்.