காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜா பாடியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியில் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மீகவாதிகள், தொழில் முனைவோர் என பலர் பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்று பேசியதாவது, காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் அதிக தொடர்பு இருக்கின்றது. பாரதியார் காசியில் இரண்டு வருடங்கள் தங்கினார். பாரதியார் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை காசியில் தான் பயின்றார்.
இது தமிழ் மக்களுக்கு பெருமை. பாரதியார் பாடலை பற்றி சுட்டி காட்டினார். தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசி என்னும் புண்ணிய பூமியில் நடத்துவதற்கான ஆலோசனை எப்படி பிரதமருக்கு தோன்றியது என எண்ணி வியந்தேன். மேலும் மகிழ்ச்சியும் அடைகின்றேன் என கூறியதை தொடர்ந்து ஜனனி ஜனனி என்ற பாடலை பாடினார். மேலும் நான் கடவுள் திரைப்படத்தில் இடம் பெற்ற ஹர ஹர மகாதேவா பாடலையும் தனது குழுவோடு இணைந்து பாடி அனைவரையும் உறைய வைத்தார்.