கன்னியாகுமரியில் மலையை குடைந்து மணல் எடுப்பதை கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் நிர்வாகி காளியம்மாள், நாங்கள் சொல்கிறோம் எங்கள் வளம், எங்கள் வாழ்நாள் தலைமுறை மக்களுக்கானது. எங்களுடைய வரலாற்றை படைக்கக்கூடிய அடுத்த தலைமுறைக்கானது. எங்களுடைய வளம், எங்களுடைய மலைகளும், எங்களுடைய மண்ணும், எங்களுடைய கடல் வளமும், எங்களுடைய நில வளமும், எங்களுடைய நீர் வளமும், அவனவன் வளம் அவனவனுக்கு சொந்தம் என்றால்,
தமிழர் நிலத்தினுடைய வளம், தமிழர்களான எங்களுக்கே சொந்தம், அதை ஒருவரும் தாரை வார்த்து கொடுக்க முடியாது. நீங்கள் சொல்லி பிரித்து வைத்திருக்கக்கூடிய இந்த சி.ஆர்.எஸ் சட்டத்தையே நாங்கள் சொல்கிறோம். சிஆர்எஸ் சட்டத்தில் சிசெட் எம்பி மேப் என்று ஒன்று இருக்கிறது. கிராம மேலாண்மை வரைபடம். அதை நாம் தமிழர் கட்சி நீங்கள்… நீங்க எந்த இடத்தில் எல்லாம் அறுமணல் எடுக்க போகிறீர்களோ,
எந்த இடத்தில் எல்லாம் தாது மணல் எடுக்க போகிறீர்களோ, தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப் போகிறீர்களோ, எந்த இடத்தில் எல்லாம் துறைமுகத்தை கொண்டு வரப் போகிறீர்களோ, எந்த இடங்களில் எல்லாம் மலை நிலங்களை கொள்ளையடிக்க போகிறீர்களோ, அந்த வரைபடத்தை மக்களோடு இணைந்து நாங்கள் வரைந்து உங்களுக்கு தருவோம். அது எங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கான நிலம், எங்களுடைய வாழ்நாளில் நாங்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டு வைத்துப் போகக்கூடிய மிகப்பெரிய சொத்தாக இருக்கக்கூடிய வளங்களை நாங்கள் வரைபடம் இட்டு தருகிறோம்.
ஒன்றுமே இல்லாத ஊராட்சி. ஒரு அரசு மருத்துவமுறை கூட கிடையாது. அது ஏற்கனவே வளர்ச்சி அடைந்த பகுதி, எப்படி சொல்லுகிறீர்கள்? நாங்கள் நான்கு வழி சாலை போடுகிறோம். நான்கு வழிச்சாலை எங்க இருந்து போடுகிறீர்கள், எங்களுக்கு போவதற்கு பணம் இல்லை. பஸ் பேருந்தில் இலவசம் என்று சொல்லுகிறீர்கள்.. சரி என்று ஏறி உட்கார்ந்தால், இப்ப சொல்கிறீர்கள் 80 விழுக்காடு ஆதி தமிழர் குடி மக்களுக்கு…
சாதி சான்றிதழ் கொடுத்தீர்களா பேருந்தில் ஏறும் போது.. டிக்கெட் கொடுக்கிறீர்களா? அல்லது சாதி சான்றிதழ் கொடுக்கிறீர்களா? அப்போ ஆதி தமிழர் குடிமக்கள் பெண்கள் தான் இலவசமாக பயணிக்கிறார்கள் என்றால் எதை வைத்து சொல்ல வருகிறீர்கள் ? பேருந்தில் பயணச் சீட்டு எடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களெல்லாம் ஆதி தமிழர் குடிமக்களாக தான் இருக்க முடியும் என்று நிர்பந்திகிறீர்களா எங்களை ? இல்லை சாதியை கூறி இவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தான் இருக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்.
அவர் என்ன சொல்கிறார் என்றால்? கேரளாவில் இருப்பதெல்லாம் இயற்கையினுடைய கொடை, எங்களுடைய சொந்த பூமி. அந்த மலைகளை உடைக்க முடியாது. ஏன் இளிச்சவாயன் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார், யாரும் போராட மாட்டார்கள். அங்கு இருக்கிறது மலை, காசு கொடுத்து, கமிஷன் கொடுத்தால் மலைகளை உடைப்பதற்கு அனுமதியை கொடுத்து விடுவார்கள், அங்கு போய் உடைத்துக் கொண்டு வந்து கொட்டுங்கள் என்கிறார்கள் என விமர்சித்தார்.