அரியலூர் மாவட்டம் தா. பலூர் 15ஆவது ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் சாமிநாதன், அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் வாக்காளர் பட்டியல் வரிசை எண் மாறி இருந்ததாகக் கூறி தேர்தல் அலுவலர்கள் அவர்களது மனுக்களை நிராகரித்தனர்.
இதனால், திமுக போட்டியிட முடியாத சூழல் உருவாகவே, அங்கு அதிமுக வேட்பாளர் அசோகனுக்கும் அமமுக வேட்பாளர் செல்வகுமாருக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
இந்நிலையில், அப்பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர், அமமுக வேட்பாளர் அசோகனுக்கு அரிக்கேன் விளக்கு சின்னத்திற்கு வாக்கு சேகரித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.