அண்ணன் திருமாவளவன் பேச்சை நான் கேட்பேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
மேலும் சீமானின் பேச்சு குறித்து விக்கிரவாண்டி பகுதிக்குட்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.மேலும் என்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் சீமான் தெரிவித்திருந்தார். சீமானின் கருத்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில் அமைதிப்படையை அனுப்பியதில் சீமான் ஆவேசம் சரிதான் அனால் விடுதலை புலிகள் குறித்து கவனமாக பேசவேண்டும் என்று தெரிவித்தார். இதற்க்கு சீமான் அண்ணன் சொல்லிட்டாங்க இனி தம்பி நான் கவனமா பேசுறேன் என்று தெரிவித்தார்.