Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அணியை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்வேன்’ – சாஹல் உறுதி….!!

இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் எங்களுடைய திறமையை நிரூபிப்போம் என சாஹல் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சு குறித்த கேள்விகளும், விமர்சனங்களும் எழத்தொடங்கியது. இந்நிலையில் அணியின் தோல்விக்கு பிறகு செய்தியளர்களைச் சந்தித்த சுழற்பந்து வீச்சாளர் சாஹல், ஒருமுறை செய்த தவறை நாம் மறுமுறை செய்யக்கூடாது என்றார்.

Image result for india vs bangladesh t20

மேலும் அவர் கூறுகையில், இது மூன்று போட்டிகள் கொண்ட தொடராகும், அதுமட்டும் இல்லாமல் இது ஒன்றும் நாக் அவுட் போட்டி கிடையாது. அதனால் நாங்கள் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் அணியின் வெற்றிக்காக போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருக்கும் சாஹல், பந்துவீச்சை தலைமை தாங்குகிறாரா என்ற செய்தியாளரின் கோள்விக்கு பதிலளித்த சாஹல், நான் அப்படி கூறவில்லை. நமது அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவரும் 30-40 ஐபிஎல் போட்டிகளை விளையாடியுள்ளனர். அவர்களுடன் ஒப்பிடும்போது நான் கொஞ்சம் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |