ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் பின்புறம் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கீழக்கரையை சேர்ந்த முகமது அலி ஜின்னா(51), சதாம் உசேன்(43), ஷாஜகான்(46), சசிகுமார்(45) என்பது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பணம் வைத்து சூதாடிய தெரியவந்துள்ளது. மேலும் 4 மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவர்கள் சீட்டு விளையாட பயன்படுத்திய 13,000யும் பறிமுதல் செய்துள்ளனர்.