Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது சட்டப்படி குற்றம்… பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மாவு ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 மூட்டை அரிசி மாவு மற்றும் 16 மூட்டை ரேஷன் அரிசி அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூரணமால் காலனியில் இயங்கி வரும் ஒரு மாவு அரவை ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தாசில்தார் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தாசில்தார் தலைமையில் தாலுகா வினியோக அதிகாரி சுப்புலட்சுமி, கிராம நிர்வாக அதிகாரி திரு ரெங்கராஜ் மற்றும் போலீசார் இணைந்து ராமு மகன் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான பூரணமால் காலனியில் இயங்கிவரும் அரவை ஆலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த சோதனையில் அங்கு பதுக்கி வைத்திருந்த 8 மூட்டைகளில் அரிசி மாவு மற்றும் 16 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தூத்துக்குடி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர். மேலும் ஆலை உரிமையாளரான மாரிமுத்துவிடம் அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |