சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம், ராமநாதபுரம், ராம் நகர், வைசியாள் வீதி, லஜபதிராய் வீதி மற்றும் சங்கநூர் ரோடு போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், குமரேசன், விஜயபாஸ்கர் பசுபதி, பழனி மற்றும் ஜேசுராஜ் போன்ற 8 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 83 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.