சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமகிருஷ்ணாபுரம், குமரன் மார்க்கெட், பி.பி. வீதி, சிவானந்தபுரம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக விஜயன், சண்முகம், முகமது அலி போன்ற 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 55 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.