Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் என்ன வேலை….? வசமாக சிக்கிய நால்வர்…. சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கள் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிலர் சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்துள்ளனர்.

இந்நிலையில் தோட்டத்தில் வைத்து சட்ட விரோதமாக கள் விற்பனை செய்த குற்றத்திற்காக திருமலைச்சாமி, கணபதி உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |