கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுண்டன் பாளையம் பகுதியில் மகேந்திரன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் அல்லிமுத்து என்ற கூலித் தொழிலாளியும் வசித்து வருகிறார். இந்த இருவருக்கும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இதில் அல்லி முத்துக்கு வசந்தி என்ற சித்தி உள்ளார். இந்நிலையில் வசந்திக்கும் மகேந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதுபற்றி அல்லிமுத்துக்கு தெரியவர, அவர் தனது சித்தியுடனான கள்ள தொடர்பை கைவிடுமாறு மகேந்திரனை கண்டித்துள்ளார். ஆனால் அதை கேட்காத மகேந்திரன் வசந்தி வீட்டிற்கு மறுபடியும் சென்றுள்ளார்.
அப்போது திடீரென அங்கு வந்த அல்லிமுத்து, மகேந்திரனிடம் தகராறு செய்துள்ளார். இதில் கோபம் அடைந்த அல்லிமுத்து தனது கையால் மகேந்திரனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து மகேந்திரன் அங்கிருந்த சமுதாய கூடத்தில் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய அல்லிமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர்.