கள்ளக்காதலியுடன் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சங்கரன்புதூர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேரூர் பஞ்சாயத்தில் குப்பை அள்ளும் வண்டியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் பேரூர் பகுதியில் வசிக்கும் சுபாஷ் என்பவரின் மனைவியான வித்யா என்ற பெண் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த வித்யாவிற்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேஷ் குமாருக்கும், வித்தியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது.
இது குறித்து அறிந்த சுரேஷ்குமாரின் பெற்றோர் அவரை கண்டித்ததோடு, பாபநாசம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து சுரேஷ்குமார் தனது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் வித்தியா கள்ள காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். அதன்பின் வேலை பார்க்கும் சமயத்தில் சுரேஷ்குமார் வித்யாவை மீண்டும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்ததால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் நெல்லை மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்திற்கு சென்று ஒரு வாடகை வீடு எடுத்து கணவன் மனைவி என பொய்யான தகவலைக் கூறி தங்களது வாழ்க்கையை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் சுசீந்திரம் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என்று சுபாஷ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சுரேஷ்குமார் மற்றும் வித்யா இருக்குமிடம் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தங்களை சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என நினைத்த கள்ளகாதல் ஜோடிகள் காவல்துறையினர் வருவதை அறிந்த உடன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் வித்யாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.