Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நம்ம சந்தோசமா இருக்க முடியாது” கள்ளகாதலால் நடந்த விபரீதம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூழ் வியாபாரியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ராஜேந்திரன் என்ற கூழ் வியாபாரி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ராஜேந்திரனை வேங்கை நகர் பகுதியில் வைத்து மர்மநபர்கள் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவேரிப்பட்டணம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ராஜேந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனுக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இதில் மூன்றாவது மனைவியான முனியம்மாளுக்கும், உறவினரான குமார் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது.

இது குறித்து அறிந்த ராஜேந்திரன் முனியம்மாளை கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ராஜேந்திரனை கொலை செய்தால் தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என முனியம்மாள் குமாரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கூழ் விற்பனை செய்வதற்காக ராஜேந்திரன் செல்லும் வழியில் அவரை கொலை செய்ய இருவரும் முடிவெடுத்தனர். அதன்படி ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது குமார் தனது கூட்டாளிகளான ரகு, பார்த்திபன், சதீஷ், பவுன்ராஜ், திருப்பதி போன்றோருடன் இணைந்து ராஜேந்திரனை அடித்துக் கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் ராஜேந்திரனின் மனைவி உட்பட 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |