Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாழ்ப்பாள் போட்ட உரிமையாளர்… வெளிவந்த கள்ளகாதல் விவகாரம்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தூங்கிக் கொண்டிருக்கும் போது வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் கோதண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிரோஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிரோஷாவிற்கு டெய்லர் கடை நடத்தி வந்த மணிகண்டன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கோதண்டபாணி வீட்டில் இல்லாத சமயத்தில் நிரோஷா தனது கள்ளக் காதலனான மணிகண்டனுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுள்ளார்.

இதனை அடுத்து இவர்களின் கள்ளகாதல் விவகாரம் கோதண்டபாணிக்கு தெரிந்த பிறகு மனைவியை கண்டித்ததோடு, அவமானத்தில் அந்த வீட்டை காலி செய்து விட்டு மற்றொரு வீட்டில் குடும்பத்தினருடன் குடியேறியுள்ளார். அதன் பிறகும் நிரோஷா தனது கள்ளக் காதலை விடாமல் தொடர்ந்ததால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இரவு நேரத்தில் கோதண்டபாணி தூங்கிக் கொண்டிருந்த போது, யாரோ அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது, அவரது மனைவியான நிரோஷா தான் இதை செய்யவில்லை எனவும், மொட்டை மாடி வழியாக உள்ளே நுழைந்த சில மர்ம நபர்கள் கோதண்டபாணியை வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மணிகண்டன் தலைமறைவானதால் கோதண்டபாணியை கொலை செய்தவர்களின் உண்மை விவரம் தெரியவில்லை. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் மணிகண்டன் சிக்கினால் தான் கொலைக்கான உண்மை காரணம் பற்றி தெரியவரும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |