Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவர் தற்கொலை பண்ணிகிட்டார்” நாடகமாடிய மனைவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் சரக்கு வாகன ஓட்டுனரான ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சுகிரி பகுதியில் வசிக்கும் தங்கமணி என்பவரோடு ரூபாவிற்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனையடுத்து கடந்த 21-ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஐயப்பன் சடலமாக கிடந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஐயப்பனின் கை மற்றும் கால்களை கட்டி போட்டு ரூபாவும், தங்கமணியும் இணைந்து அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதன்பிறகு தனது கணவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார் என ரூபா நாடகமாடியுள்ளார். இதனை அடுத்து ரூபா மற்றும் தங்கமணியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |