Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கல்யாணத்திற்கு முன்பே தெரியும்” கள்ளக்காதலால் நடந்த கொடூரம் ….மனைவியின் பரபரப்பு வாக்குமூலம் ….!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுபான கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்ததுள்ளார்.  இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஸ்ரீ, இசைவி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துக்குமார் தனது தாயார் மற்றும் மைத்துனர் உடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த முத்துக்குமார் தனது வீட்டின் வாசலில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இ தனைப் பார்த்த உறவினர்கள் முத்துக்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து  முத்துக்குமாரின் மனைவி தனது கணவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். ஆனால் உடற்கூறு ஆய்வில் முத்துக்குமார் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் சுமித்ராவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சுமித்ரா தனது கள்ளக்காதலன் சுந்தர் உடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்துக் கொன்றேன் என துணிகரமாக கூறியுள்ளார்.

மேலும் அவர் சுந்தரை எனக்கு திருமணத்திற்கு முன்பே தெரியும் என்று தெரிவித்துள்ளார். இதனை அறிந்த எனது கணவர் என்னை கண்டித்ததால் நானும் சுந்தரும் அவரைக் கொல்வதற்கு திட்டமிட்டோம் என்று சுமித்ரா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுமித்ராவின் கள்ளக்காதலான சுந்தரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |