Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உன்னையும் அதே மாதிரி செய்வோம்” வெளிவந்த திடுக்கிடும் உண்மை…. திருப்பூரில் பரபரப்பு…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதியினர் இணைந்து வாலிபரை கொலை செய்து புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதப்புள்ளபட்டி பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் ரமேஷ்-சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு ஆடு மேய்க்கும் வேலையை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ரமேஷ் தனது உறவினரான 17 வயது சிறுவன் மற்றும் மணிகண்டன் என்ற வாலிபரை உதவிக்காக தன்னுடன் தங்க வைத்துள்ளார். அப்போது சித்ராவுக்கு, 17 வயது சிறுவன் மற்றும் மணிகண்டன் போன்றோருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்த ரமேஷ் மணிகண்டனுடன் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு ரமேஷ், சித்ரா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் இணைந்து மணிகண்டனை அடித்து கொலை செய்து அந்த தோட்டத்தில் புதைத்து விட்டனர். இதனை தொடர்ந்து குண்டடத்தை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட ரமேஷ் அந்த வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அப்போது ஏற்கனவே “நாங்கள் 6 மாதத்திற்கு முன்பு மணிகண்டன் என்பவரை கொலை செய்து புதைத்து விட்டோம் எனவும், நான் சொல்லும் படி நீ செய்யவில்லை என்றால் உன்னையும் கொலை செய்வோம்” என ரமேஷ் அந்த வாலிபரை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த வாலிபர் தோட்டத்தின் உரிமையாளரான பாலசுப்ரமணியனிடம் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தோட்டத்தில் புதைக்கப்பட்ட மணிகண்டனின் சடலத்தை அதிகாரிகளின் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கொலை செய்த குற்றத்திற்காக சித்ரா, ரமேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |