கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கர்ப்பிணி மனைவியை கணவர் குக்கர் மூடியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் கூலித் தொழிலாளியான மனோஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு மனோஜ் குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவரது மனைவி 8 மாதம் கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்நிலையில் மனோஜிற்கும், அவரது மனைவியின் தங்கையான 19 வயது இளம்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த மனோஜ் குமாரின் மனைவி தனது தங்கையை கண்டித்துள்ளார்.
இதனை அடுத்து மனோஜ் குமாரையும் அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மனோஜ் குமார் வீட்டில் இருந்த குக்கர் மூடியை எடுத்து கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதுகுறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் அந்த கர்ப்பிணிப் பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனோஜ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.