தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 12 பேரை ஒரே நாளில் போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் அம்மாபட்டியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த வைரம்(42) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து பாலக்கோம்பை பகுதியில் போத்திராஜா என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அங்கு சென்ற காவல்துறையினர் போத்திராஜாவை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதேபோல் நேற்று ஒரே நாளில் மது விற்பனை செய்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் 80 மதுபாட்டில்களை கைப்பற்றியுள்ளனர்.