சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள குமளங்குளம் பகுதியில் எம்.புதுப்பட்டி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் விநாயகர் தெருவில் வசித்துவரும் தங்கராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.